Tuesday, December 29, 2009
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: பால்தேவ் நாயுடுவை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சிங்கப்பூர்
தமிழீழ விடுதலைப் பு1லிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பால்தேவ் நாயுடு ராகவனை (47) அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது சிங்கப்பூர். பால்தேவ் நாயுடு ராகவன் அல்லது பால்ராஜ் நாயுடு ராகவன் என்று அழைக்கப்படும் சிங்கப்பூரர் அமெரிக்காவில் பயங்கரவாதம் தொடர்பான வழக்கை எதிர்நோக்குகிறார். அவர் டிசம்பர் 18ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பட்டதாக சிங்கப்பூர் போலிஸ் தமிழ் முரசிடம் உறுதிப்படுத்தியது. சதித்திட்டம் தீட்டியது, வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்குப் பொருட்களை வழங்கியது, பயங்கர ஆயுதத்தைக் கைவசம் வைத்திருந்தது உட்பட ஆறு குற்றச்சாட்டுகளை அவர் மீது அமெரிக்க அரசு சுமத்தியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் இக்குற்றங்களை அவர் புரிந்ததாகக் கூறப்படுகிறது. புலிகளுடனான தொடர்பை மறுக்கும் பால்தேவ் இன்று அமெரிக்காவில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார். அவர் தற்போது பால்டிமோரில் உள்ள விசாரணை தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 22ம் தேதி சிங்கப்பூர் வீட்டில் கைது செய்யப்பட்ட அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவில் தீவிரவாதம் தொடர்பான வழக்கை எதிர்நோக்குவதற்கு பால்தேவ்வுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நவம்பர் 3ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் திரு நாயுடு. நாயுடுவுடன் இணைந்து சதிச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆயுதத் தரகர் ஹனீஃபா ஒஸ்மானுக்கு (57) 2008ல் பால்டிமோர் நீதிமன்றம் 37 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது. சிங்கப்பூர் நாயுடுவை அமெரிக்காவிடம் ஒப்படைத்ததை இலங்கை அரசாங்கம் பாராட்டி உள்ளதாக இலங்கைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment