பிரியாமணியும் ஜெகபதிபாபுவும் 3 தெலுங்கு படங்களில் தொடர்ந்து ஜோடியாக நடித்து வருவதால் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாக ஆந்திரபட உலகம் கிசுகிசுக்கிறது.
தமிழில் பருத்தி வீரன் படம் மூலம் தேசிய விருது பெற்ற பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மலையாளத்திலும் அறி முகமானார். ஏற்கனவே பிருதிவிராஜூடன் பிரியாமணியை இணைத்தும் செய்திகள் வந்தது.
இருவரும், திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது, ஆனால் பிருதிவிராஜ் வெறும் நண்பர்தான் என்று பிரியாமணி மறுத்தார்.' தனது தாயும், பிருதிவிராஜ் அம்மாவும் தோழிகள். பால்யகால தோழிகள் என்பதால் நாங்கள் நெருங்கி பழகுகிறோம்'என்றார்.
மலைக்கோட்டை படத்தில் விஷாலும், பிரியாமணியும் ஜோடியாக நடித்தனர். அப்போது ஒரு நடிகையை காதலிப்பதாகவும், அந்த நடிகைக்கு காதலிக்கிற விஷயம் தெரியாது என்றும் விஷால் கூறினார். அது பிரியாமணியாக இருக்கலாம் என்று பேச்சுகள் அடிப்பட்டன. இப்போது ஜெகபதிபாபுவுடன் காதல் என்கின்றனர். பெல்லைனா கொத்தல்லோ, பிரவர்க்கியூடு ஆகிய இருபடங்களில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்தனர்.
இப்படங்கள் ஆந்திராவில் வெற்றிக்கரமாக வசூலை வாரிகுவித்தது. இதையடுத்து அவர்களை ராசியான ஜோடி என தெலுங்குகாரர்கள் கொண்டாடினார்கள். இப்போது “மீண்டும் சாத்யம்” என்ற தெலுங்கு படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்கள். கீர்த்தி சாவ்லாவும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் ஜெகபதி பாபுவுடன் பிரியாமணி நெருக்கமாக நடித்த படங்கள் இண்டர்நெட்டில் பரவியுள்ளன. இருவரும் ரகசியமாக சந்திப்பதாகவும், நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக தங்குவதாகவும் கூறுகின்றனர். இந்த காதல் பற்றி ஜெகபதியிடம் கேட்டபோது"நானும் பிரியாமணியும் நண்பர்கள். எங்களுக்குள் காதல் சமாச்சாரம் எதுவும் இல்லை " என்று மறுத்தார்.
Sunday, December 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment