Thursday, December 24, 2009
பாகிஸ்தானில் இன்றும் குண்டு வெடித்தது
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; 25 பேர் படுகாயமடைந்தனர்.பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகள் தினசரி நிகழ்ச்சியாகி விட்டது. பெஷாவர் நகரில் நேற்று சோதனைச் சாவடி அருகே வந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் இருந்த தற்கொலைப் படை பயங்கரவாதி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் உடல் சிதறி பலியாயினர்; 25 பேர் படுகாயமடைந்தனர்.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment