போலீஸ்காரர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த முன்னாள் டி.ஐ.ஜி. கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார். போலீஸ் டி.ஜி.பி.யின் பாலியல் தொந்தரவு தாங்காமல் சண்டிகர் பள்ளி மாணவி ருச்சிகா தற்கொலை செய்தது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தானில் போலீஸ் முன்னாள் டி.ஐ.ஜி. ஒருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் பலாத்கார புகார் 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்ப ட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குற்றச்சாட்டுக்குள்ளான போலீஸ் அதிகாரியின் பெயர் மதுக்கர் டாண்டன். கடந்த 1997ல் ராஜஸ்தான் மாநிலம் தவுசா நகரில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றினார். அப்போது, அவரது வீட்டில் ஆர்டர்லியாக வேலை பார்த்த போலீஸ்காரரின் மனைவி மாலினியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மதுக்கர் டாண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதும் டாண்டன் தலைமறைவாகிவிட்டார். 2002ல் அவரை ராஜஸ்தான் அரசு பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது.
ருச்சிகா விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மதுக்கர் டாண்டன் விவகாரமும் மீண்டும் பேசப்படுகிறது. இது குறித்து மாலினியின் கணவர் கூறுகையில், ÔÔநான் போலீசில் வேலை பார்த்ததால் டி.ஐ.ஜி. மீதான புகாரை வாபஸ் வாங்கிவிடு என்று உயர் அதிகாரிகள் மிரட்டினர். பணம் கொடுப்பதாக சொன்னார்கள். வாங்க மறுத்ததால் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்கள். கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2001ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட போதும் அவரை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே 2002ம் ஆண்டில் டான்டனின் எல்லா சொத்துக்களையும் முடக்கி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை. 2005ல் நொய் டாவில் உள்ள சொத்தை டாண்டன் விற்று விட்டார். பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்க வேண்டும், டாண்டனை கைது செய்து தண்டிக்க வேண்டும்ÕÕ என்றார்.
இது தொடர்பாக தவுசா தொகுதி எம்.பி. கிரோரி லால் மீனாவின் உதவியை மாலினியும், அவரது கணவரும் நாடினர். இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை நேற்று சந்திக்க எம்.பி.யுடன், மாலினியும், அவரது கணவரும் சென்றனர். ஆனால், அவர்களை சந்திக்க முதல்வர் மறுத்துவிட்டார். இதனால், எம்.பி. கிரோரி லால் மீனாவும், மாலினி, அவரது கணவர் ஆகியோர் கெலாட் வீடு அருகே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கர் டாண்டனை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
Tuesday, December 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment