வேதிப்பொருள் என்ற போர்வையில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான பூச்சிக் கொல்லி மருந்துகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சோப்பு, ஷாம்புகள், வாசனை திரவியங்கள், சாக்லெட்டுகளை அடுத்தடுத்து அனுப்பிய சீனா தற்போது தரமற்ற, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. சீனாவிலிருந்து "வேதிப்பொருள்' என்ற பெயரில் ஆறு கன்டெய்னர்கள் சென்னைக்கு இறக்குமதியானது.
சந்தேகத்தின் பேரில், சுங்கத்துறை கமிஷனர் ராஜன் மற்றும் அதிகாரிகள் கன்டெய்னர் களை ஆய்வு செய்தனர்.பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் இருந்தன.வேதிப்பொருள் என்ற போர்வையில் மோசடியாக சீனாவிலிருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து, 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான திரவம் மற்றும் பவுடர் வடிவிலான 72 டன் பூச்சிக் கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து, சுங்கத்துறை கமிஷனர் ராஜன் கூறுகையில்,"வேதிப் பொருள் என்ற பெயரில் பூச்சிக்கொல்லி இறக்குமதி செய்ததன் மூலம் 12 லட்ச ரூபாய் வரி ஏய்ப்பும் நடந்துள்ளது.இது தொடர்பாக இரண்டு சுங்கத்துறை முகவர்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளோம். சென்னை, மதுரை, கோவில்பட்டியைச் சேர்ந்த ஏழு இறக்குமதி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சன்செய் அகர்வால் (46) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்,"என்றார்.
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment