
"எனக்கு எல்லாமே இசைதான். அதற்கு அடுத்ததுதான் மற்ற விஷயங்கள் அன்புக்கான உணவுதான் இசை. அது இல்லாமல் நானில்லை. என் மனம் எப்போதும் அமைதியாக இருக்க, இசைதான் முக்கிய காரணம். சமீபத்தில் சென்னையில் எனது இசை நிகழ்ச்சியை நடத்தினேன். நீண்ட இடைவெளிக்கு பின், இங்கு நடந்த எனது இசை நிகழ்ச்சி இது. இதில் மராட்டிய இசை குழுவுடன் சேர்ந்து பணியாற்றினேன்.
எனது பழைய இசைக் குழுவுடன் ஏன் பணியாற்றவில்லை எனக் கேட்கிறார்கள். இசை அமைப்பாளர், பல வகை திறமை கொண்ட குழுக்களுடன் பணியாற்ற வேண்டும். பலவித கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். நாடு முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த பயணமாகும்போது நிறைய குழுக்களை பார்த்தேன். பல திறமையான இசைக்குழுக்கள் உள்ளன. அவர்களுடன் பணியாற்றவே விரும்புகிறேன். தேவ் டி இந்தி படத்துக்கு இசையமைத்த அமித் திவாரியின் இசை எனக்கு மிகவும் கவர்ந்தது. அவருடனும் பணியாற்ற வேண்டும். இசைதான் எனக்கு எல்லாமே. மற்ற விஷயங்கள் அடுத்ததுதான்"இவ்வாறு ஸ்ருதி கூறினார்.
No comments:
Post a Comment