வரும் 2012ம் ஆண்டில் உலகம் அழிந்து விடுமா? இப்படி ஒரு சினிமா வெளிவந்ததை அடுத்து ஏற்பட்ட சந்தேகங்களுக்கு இந்திய விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.சமீபத்தில், "2012 - தி எண்ட் ஆப் தி வேர்ல்டு' என்ற ஹாலிவுட் படம் வெளியானது. தமிழ், கன்னடம் உட்பட பல மாநில மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தில், உலகம் அழிவது போல காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.
இதை இளைஞர்கள் பலரும் நம்பி பீதி அடைந் தனர். அறிவியல் நிபுணர்கள் இது தொடர்பாக, விழிப்புணர்வை ஏற்படுத்த கருத்தரங்குகளும் நடத்தி வருகின்றனர். பெங்களூரு நகரில் உள்ள "ப்ரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டி' என்ற ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்."பூமி மீது விண்கல் மோதுவதாகவும், பூமியின் மின்காந்த சக்தி இழந்து போய், அழிவதாகவும் சொல்வதெல்லாம் கட்டுக்கதை. எதிர்கால கணிப்பாளர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டி, உலகம் 2012 ல் அழிந்து விடும் என்று "மாயன்' காலண்டர் தெரிவிப்பதும் கட்டுக்கதையே.சூரியன் அதிக வெப்பமாகி, பல சுனாமிகள், பூகம்பங்கள் வருவதாக சந்தேகிப்பதும் கட்டுக் கதை' என்று கூறியுள்ளனர். மக்களிடம் இதுதொடர் பாக விழிப்புணர்வை ஏற்படுத்த, வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
Saturday, December 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment