Thursday, December 24, 2009
இனிமேல் தமிழ்தான் என் குறிக்கோள் - காஜல்
இதுவரை நான் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக இருந்ததால் தமிழில் கவனம் செலுத்தவில்லை. இனி எனது கவனம் முழுதும் தமிழில் இருக்கும் என்று கூறியிருக்கிறார். நடிகை காஜல் அகர்வால். அவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான மகாதீரா படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன மகிழ்ச்சியில் இருக்கும் காஜல், தற்போது தமிழில் கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் நடித்து வருகிறார். வெண்ணிலா கபடிக் குழு சுசீந்திரன் இயக்கும் இந்த படம் தனக்கு தமிழில் பெயர் சொல்லும்படியான இடத்தை பிடித்து தரும் என்று சொல்லும் காஜல், கதையின் மீதான் நம்பிக்கையில் இப்படி சொல்வதாகவும் கூறியிருக்கிறார். தமிழில் பிரேக் கொடுக்கும் அளவுக்கு இதுவரை கவனம் செலுத்தியதில்லை. இனி என் கவனம் முழுதும் தமிழ் சினிமாவிலேயே இருக்கும் என்றும் கூறுகிறார் காஜல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment