Pages

Monday, December 28, 2009

இரண்டு படும் ஆந்திரா - கண்டு கொள்ளாத மத்திய அரசு ?

ஆந்திராவில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது நக்சலைட்டுகளை அடியோடு ஒழித்தார். அவரது அதிரடி நடவடிக்கை காரணமாக நக்சலைட்டுகள் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு தப்பி ஓடினர்.

ரோசய்யா முதல்வராக பதவி ஏற்ற பிறகு நக்சலைட்டுகள் மீண்டும் தெலுங்கானா பகுதிக்குள் நுழைந்தனர். அவர்கள் தான் மாணவர்கள் என்ற போர்வையில் தெலுங்கானா போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் மாவோயிஸ்ட் நக்சலைட் தலைவர் சந்திரன்னா தெலுங்கானா மக்களுக்கு துண்டு நோட்டீஸ் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ஐதராபாத் தெலுங்கானா மக்களுக்கு சொந்தமானது. தற்போது இந்நகரில் ஆந்திராகாரர்கள் 70 சதவீதம் பேர் ஆக்கிரமித்துள்ளனர். “அவர்களை ஐதராபாத்தில் இருந்து விரட்டியடித்து விட்டு அவர்களது சொத்துக்களை ஆக்கிரமித்து கைப்பற்றி கொள்ளுங்கள்.

நமக்கு சொந்தமான இடத்தை நாம் கைப்பற்றுவதில் தவறு எதுவும் இல்லை. இது நமது பிறப்புரிமை. அதை யாரும் தடுக்க முடியாது” என்று அதில் கூறி உள்ளார்.

இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த நக்சலைட் ஆதரவாளர்கள் 130 பேர் திடீரென ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள சிரஞ்சீவி மைத்துனரும் பிரபல படத்தயாரிப்பாளருமான அல்லு அரவிந்தின் சினிமா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் “தெலுங்கானாவுக்கு ஜே” என்று கோஷமிட்டபடியே அந்த அலுவலகத்தின் முன்புறம் இருந்த போர்டை கழற்றி வீசினர். அதை தடுக்க முயன்ற காவலாளியை அடித்து விரட்டினார்கள்.

அந்த அலுவலகத்தின் முன்பு “தெலுங்கானா இளைஞர் பிரிவு அலுவலகம்” என்ற டிஜிட்டல் பேனரை கட்டினார்கள். இதை அறிந்ததும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அல்லுஅரவிந்த் அலுவலகத்தை உடைத்து உள்ளே நுழைய முயன்ற அக்கும்பலை விரட்டி அடித்தனர்.

இச் சம்பவத்தால் ஐதராபாத்தில் வசிக்கும் ஆந்திர பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment