Pages

Sunday, December 27, 2009

வைரமுத்துவின் ஜொள்ளு ?


நடிகைகளை புகழ்ந்து தள்ளுவதில் நடிகர்களை மிஞ்சி விட்டார் கவிஞர் வைரமுத்து. இம்சை அரசன் புகழ் சிம்புதேவன் இயக்கத்தில் தமிழில் உருவாகியிருக்கும் படம் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படத்தில் நடித்துள்ள லாரன்ஸ், லட்சுமிராய், சந்தியா, ‌பத்மப்ரியா, கவிஞர் வைரமுத்து உள்பட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பலரும் பதினெட்டாம் நூற்றாண்டு கெளபாய் கதையான இரும்பு கோட்டை முரட்டு சிங்கத்தை இயக்கிய டைரக்டர் சிம்புதேவன் மற்றும் கதையை பாராட்டினார்கள். ஆனால் கவிஞர் வைரமுத்து மட்டும் நடிகை லட்சுமி ராயை புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளினார். அவர் பேசுகையில், படத்தில் லட்சுமிராய் இந்த படத்தில் குதிரையில் ஏறி நடித்திருக்கிறார். அந்த குதிரை கொடுத்து வைத்த குதிரை... என்றெல்லாம் புகழ்ந்தார். அதனைக் கேட்டு லட்சுமிராய் உள்ளிட்ட பலரும் விழுந்து வழுந்து சிரித்தனர். விழா முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்ற வைரமுத்து, தனது காரிலேயே லட்சுமிராய்க்கு லிப்ட் கொடுத்தார்.

No comments:

Post a Comment