Monday, December 28, 2009
சென்னை தவிர நான்கு நகரங்களில் கலை நிகழ்ச்சிகள்
"சென்னையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 4 நகரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அந்தந்த ஊர்களுக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஈரோட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு நம்ம ஈரோடு என்று பெயர் சூட்டி உள்ளனர். இது ஜனவரி 2, 3, 4 தேதிகளில் 3 நாட்கள் ஈரோட்டில் நடைபெற உள்ளது.
திருப்பூர் கலை நிகழ்ச்சிக்கு திருப்பூர் கூடல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜனவரி 29, 30, 31-ந்தேதிகளில் நடக்கிறது.
திண்டுக்கல்லில் 26-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விருதுநகரிலும் கலை நிகழ்ச்சி நடப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகளுக்கான செலவை அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்களே ஏற்று கொள்வார்கள். கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதை நாங்கள் செய்து கொடுக்கிறோம்.
நாங்கள் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருவதால் கிராமிய கலைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு கிராமிய கலைகள் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இதற்கான மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது " இவ்வாறு கவிஞர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment