இதயப்பூர்வமாக செய்யும் பிரார்த்தனைகள் அற்புதங்களைச் செய்ய வல்லமை பெற்றதாக இருக்கிறது. அந்த பிரார்த்தனையை கடவுள் மிக விரைவாக ஏற்றுக் கொள்கிறார். ஆகவே, இதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தூய எண்ணங்களை வரவேற்கவும், தீய சிந்தனை, போதனைகளை எதிர்க்கும் துணிவுடையதாகவும் இருக்கும் இதயமே பரிசுத்த இதயம் ஆகும். நீங்களும் உங்கள் இதயத்தை துணிவுடையதாக வைத்துக் கொள்ளுங்கள்.
வயிற்றுக்கு உணவு இல்லாதிருப்பவர்கள், பசியை எண்ணி வருந்த தேவையில்லை. கடவுளை வேண்டி பிரார்த்தனை செய்தாலே போதும். அவர்களுக்கான தேவைகள் கிடைப்பதற்கு அவர் அருள் செய்து விடுவார். ஏனெனில், பசியால் வாடுபவர்களுக்கு கடவுளே உணவாக இருக்கிறார்.
கடவுள் ஒவ்வொருவருக்கும் பாரபட்சம் இல்லாமல், ஒரே மாதிரியான உடலைத்தான் கொடுத்திருக்கிறார். அந்த உடலை கடவுளுக்கு சேவை செய்வதற்குத்தான் பயன்படுத்தவேண்டுமே தவிர, சுகங்களை அனுபவிக்கும் வழியில் ஈடுபடுத்தக்கூடாது. உடல் சுகம் என்பது மரணத்திற்கு ஒப்பானது ஆகும். உங்களது உடலை கடவுள் சேவைக்கு அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.
வெளிப்பொருட்கள் மீது நாட்டம் வைக்காமல், புலன்களை அடக்கி வையுங்கள். அதனை அடக்குவதற்கு விரதம் இருங்கள். இத்தகைய விரதம் ஆன்ம வளர்ச்சியை அதிகரிக்கும் சாதனமாகவும், உடல், மனம், ஆத்மா ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்.
Tuesday, December 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment