ஏழை மக்களின் நோய் தீர்க்கும் ஸ்டான்லி மருத்துவமனையில், அடுத்தடுத்து நடந்த படப் பிடிப்புகளால், அவசர சிகிச்சை பிரிவுக்குக் கூட செல்ல முடியாமல், நோயாளிகள் திண்டாடினர்.
வடசென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் நோய் தீர்ப்பதில் "ஆபத் பாந்தவனாக' அரசு ஸ்டான்லி மருத்துவமனை செயல் பட்டு வருகிறது. இங்குள்ள புறநோயாளிகள் பிரிவில் மட்டும், தினமும் 5,000 பேர் வரை சிகிச்சை பெற்று செல்கின்றனர்.எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு, திடீரென "நான் மகான் அல்ல' என்ற சினிமா படத்தின், படப்பிடிப்பு நடத்தப் பட்டது.அதுவும், அவசர சிகிச்சை பிரிவில் இந்த படப்பிடிப்பு நடந்தது. இரவு 9 மணி முதல், அதிகாலை வரை படப்பிடிப்பு நீடித்தது.
விபத் துக்களில் சிக்கியும், உடல் நலம் பாதிக்கப்பட்டும், அவசர சிகிச் சைக்காக வந்த நோயாளிகளை படப்பிடிப்பு குழுவினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.அவசர சிகிச்சை அளிக்க வேண் டிய மருத்துவர்கள், உதவியாளர்களும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.இரவு நேரம் தான் இப்படி என்றால், நேற்று மதியமும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சவக்கிடங்கு பகுதியில் எடுக்கப்பட்டது. இதனால் நோயாளிகள், மக்கள் சென்று வர சிரமப்பட்டனர்.அரசு ஸ்டான்லி ஊழியர் குடியிருப்பு, வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு, தட்சிணாமூர்த்தி கோவில் செல்வோர், சவக்கிடங்கை ஒட்டிய சிறு பாதை வழியாக சென்று வருவது வழக்கம்.படப்பிடிப்பு காரணமாக, அவ் வழியே செல்லும் மக்கள், நேற்று இரண்டு கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
சினிமா படப்பிடிப்பால் சிகிச்சை பெறும் நோயாளிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் பெரிதும் திண்டாடினர்.போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த சாலைகள், ஆபத்து கால சிகிச்சை அளிக்கும் ஸ்டான்லி போன்ற முக்கிய மருத்துவமனைகள் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்குவதை தவிர்க்க வேண்டும். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Thursday, December 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
இது மாதிரி இடங்களில் படபிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்க கூடாது.பொது மக்கள் தான் முக்கியம்.அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வது நல்லது.
ReplyDelete