பின்லாந்து நாட்டில் உள்ள ஹெல்சின்கி பகுதியில் உள்ள எஸ்பூ என்ற இடத்தில் ஒரு வணிக வளாகம் உள்ளது. நேற்று இங்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது கொசாவா பகுதியை சேர்ந்த இப்ராகிம் ஷ்குபோலி என்ற வாலிபர் அங்கு வந்தார் அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில், ஒரு பெண்உள்பட 5 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இப்ராகிம் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துப்பாக்கி சூட்டில் பலியான 5 பேரும் அந்த வணிக வளாகத்தில் பணியாற்றிய ஊழியர்கள். இவர்களில் இறந்த பெண் இப்ராகிமின் முன்னாள் காதலி.
காதல் தோல்வி காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
No comments:
Post a Comment