Friday, January 1, 2010
முபையில் மணமுறிவு பெருகுகிறது ?
மும்பை உள்ளிட்ட நகரங்களில் வாழும் இளைய தலைமுறையினர், தற்போதைய அவசர கால வாழ்க்கை, பணி நெருக்கடி, மன அழுத்தம் போன்றவற்றால் தங்கள் மணவாழ்வில் தோல்வியைத் தழுவுகின்றனர். கணவனோ மனைவியோ இருவரில், ஒருவர் தன்னை விட பணத்திலும் குணத்திலும் சிறந்தவர்கள் கிடைத்தால் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பழைய கணவன் அல்லது மனைவியைக் கழட்டி விடுகின்றனர். இதனால், கணவன் மனைவி உறவு என்பது பாதுகாப்பில்லாமல் தொடர்கிறது. இது குடும்பத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு விளைவுகளை உண்டாக்குகிறது. இதை அவர்களும் உணர்ந்திருக்கின்றனர் என்பதைத்தான் மும்பை நகர ஜோதிடர்கள் தரும் தகவல்கள் தெளிவுபடுத்துகின்றன. பண வரவு, வீடு கார் போன்ற சொத்து வரவு போன்றவை பற்றிதான் ஜோதிடர்களிடம் பொதுவாகக் கேட்பர்.
குறிப்பாக பெண்கள், காதல், கல்யாணம், தங்கள் குழந்தைகள் இவர்களின் எதிர்காலம் குறித்துக் கேட்பர். ஆண்கள், மனைவி, குழந்தைகள், பெற்றோர் இவர்களின் நிம்மதியான எதிர்காலத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பர். ஆனால், இப்போது இளைய தம்பதியினரிடம் தங்கள் மணவாழ்வைப் பாதுகாப்பது குறித்த கவலை அதிகரித்திருப்பதால், தங்கள் மணஉறவு தொடர்ந்து நீடிக்குமா என்பது குறித்துத்தான் அதிகமாகக் கேட்பதாக மும்பை நகர ஜோதிடர்கள் கூறுகின்றனர். "இப்படி தங்கள் உறவு முறியாமல் நீடிக்க வேண்டும் என்று கேட்பவர்கள் நல்ல படித்த நிறைய சம்பாதிக்கக் கூடிய இளையவர்கள்தான்" என்கிறார் ரமாகாந்த் பண்டிட்.
"யாரும் மணமுறிவை உண்மையில் விரும்புவதில்லைதான். ஆனால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தவறி விடுவதால், அவர்களின் உறவு நீடிக்காமல் போய்விடுகிறது. "இப்படிப் பாதுகாப்பற்ற உணர்வுதான் பிறரை நாடத் தூண்டுகிறது. அந்நேரம் அவர்கள் தங்கள் பெற்றோரையே எல்லாவற்றுக்கும் சார்ந்திருக்க வேண்டியதாகி விடுகிறது. இது நல்லதல்ல. நவீன கால நெருக்கடியான மனஅழுத்தம் மிக்க வாழ்க்கையும் இதற்கு ஒரு காரணம். "தன்னம்பிக்கை, அனுசரித்துப் போகும் தன்மை, மரியாதை இந்த மூன்றும் தான் மண உறவைத் தாங்கிப் பிடிக்கும் தூண் கள். இவை பலவீனமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் " என்கிறார் உளவியல் டாக்டர் ஷெபாலி பாத்ரா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment