Monday, December 28, 2009
ஹாரி பாட்டருக்கு முதலிடம்
உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதாபாத்திரம், திரைப்படங்கள், யூ டியூப் ஆகிய அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி 10 ஆண்டின் உலகின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜெ.கே. ரவுலிங். இவர் ஹாரி பாட்டர் என்ற கேரக்டரை மையமாக வைத்து எழுதிய நாவல்தான் ஹாரி பாட்டர். முதல் பாகம் 1997ல் வெளியானது. 7 பாகங்களாக வெளிவந்துள்ள இது உலக அளவில் புகழ் பெற்றது. இதுவரை 40 கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. 67 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இது, வர்த்தக அளவில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. கடைசியாக வெளியான 4 பாகங்கள் உலகிலேயே வேகமாக விற்பனையான புத்தகம் என்ற சிறப்பைப் பெற்றன. பின்னர் இந்த கேரக்டரை மையமாக வைத்து ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. அதற்கும் அமோக ஆதரவு கிடைத்தது.
அமெரிக்காவின் பொழுதுபோக்கு வார இதழ் ஒன்று, கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான டாப் 100 பொழுதுபோக்கு அம்சங்களை பட்டியலிட்டுள்ளது. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆல்பம், நூல்கள், கதாபாத்திரங்கள், ஆடைகள், பாடல்கள், சோசியல் நெட்வொர்க் இணையதளங்கள் மற்றும் யூ டியூப் ஆகியவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அனைத்து அம்சங்களையும் பின்னுக்குத் தள்ளி ஹாரிபாட்டர் கதாபாத்திரம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ÔÔகடந்த 10 ஆண்டுகளில் பார்த்த, படித்த பொழுதுபோக்கு அம்சங்களிலேயே ஹாரி பாட்டர் கதாபாத்திரம் எங்களது நினைவை விட்டு இன்னமும் அகலவில்லை. குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் வரை அனைவரது உள்ளத்தையும் அது கவர்ந்துள்ளதுÕÕ என டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், சொப்ரனோஸ் என்ற தொலைக்காட்சி தொடர் இரண்டாம் இடத்தையும், யூ டியூப் இணையதளம் மற்றும் தி லார்டு ஆப் த ரிங்ஸ் என்ற திரைப்படம் முறையே மூன்று மற்றும் 4ம் இடங்களைப் பிடித்தன. கடந்த 2000 ஆண்டில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற பாடகி ஜெனிபர் லோபஸ் அணிந்திருந்த ஆடை 29வது இடத்தைப் பிடித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment