மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள், தங்களின் சொந்த நாட்டுடனான தொடர்பை விட்டுவிட வேண்டும் என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது கூறியுள்ளார்.மலேசியாவில் 22 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மகாதிர் முகமது. இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரே. இந்நிலையில், அவர் கூறியுள்ளதாவது:
"மலேசியாவில் முஸ்லிமாக மதம் மாறிய பலர், சமூகத்தில் பல பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அதற்கு காரணம் அவர்கள் மலாய் மொழி பேச மறுப்பதே. மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள் எல்லாம் தங்களின் தாய் மொழியான தமிழ்தான் பேசுகின்றனர். தமிழ் பேசுவதால், மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் அவர்களை பாரபட்சமாக நடத்துகின்றனர்.
மேலும், மலேசியாவில் வசிக்கும் இந்திய முஸ்லிம்கள் முழுமையாக மலேசிய கலாசாரத்தை பின்பற்ற மறுக்கின்றனர். முழுமையாக மலாய் மொழி பேசவும் தயங்குகின்றனர். தாய் மொழியான தமிழ் பேசுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர். அதனால், இந்தியாவுடனான தங்களின் தொடர்பை மலேசியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் விட்டுவிட வேண்டும். அப்படிச் செய்வது அவர்களுக்கு நல்லது. இருப்பினும், இதைச் செய்ய வேண்டியது அவர்களே "இவ்வாறு மகாதிர் முகமது கூறினார்.
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment