ர்ஜென்டினா நாட்டில் உள்ள சாந்தாவே என்ற இடத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பிஷப்பாக இருந்தவர் எட்கார்டோ ஸ்டோர்னி (73).
இவர் 1992-ம் ஆண்டு பாதிரியாருக்கு படித்து வந்த ஒரு மாணவருடன் ஓரின சேர்க்கை “செக்ஸ்” சில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.
சம்பவம் 1992-ம் ஆண்டு நடந்ததாலும். அங்கு நடந்த செக்ஸ் சம்பவங்கள் 2000-ம் ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் புத்தகம் எழுதி வெளியிட்டார். அதன் பிறகே இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.
இதையடுத்து பிஷப் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதனால் அவர் 2002-ம் ஆண்டு பிஷப் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது. நீதிபதி அவருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். அவரது வயதை கருதி வீட்டுக் காவலில் இருந்தபடியே தண்டனை அனுபவிக்கலாம் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் நீதிபதி கூறினார்.
அர்ஜென்டினாவில் “செக்ஸ்” குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அடையும் 4-வது பாதிரியார் இவர் ஆவார்.
Thursday, December 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment