ஆந்திர கவர்னர் என்.டி. திவாரி மீது “செக்ஸ்” புகார் வந்து இருப்பது இப்போது முதல் முறை அல்ல. அவர் ஆந்திர கவர்னர் ஆவதற்கு முன்பு உத்தரகாண்டத்தில் முதல்- மந்திரியாகவும், உத்தர பிரதேசத்தில் 3 முறை முதல்- மந்திரியாகவும் இருந்தார். பலமுறை மத்திய மந்திரியாகவும் இருந்தார்.
1952-ல் முதன் முதலில் அரசியலுக்கு வந்தார். அதில் இருந்தே அவர் “செக்ஸ்” விஷயத்தில் பலவீனமாகவே இருந்துள்ளார். அவர் முதல்-மந்திரியாக மற்றும் மந்திரியாக இருந்த காலங்களில் அவருக்கு பெண்களை சப்ளை செய்தே அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் காரியம் சாதிப்பார்களாம்.
பெண்களை சப்ளை செய்பவர்களுக்கே அரசியலிலும் முக்கிய பதவிகளை கொடுப்பாராம்.
சாதாரண உள்ளூர் தலைவர் பதவி உள்பட பெரிய பதவிகள் வரை அவருக்கு பெண்களை விருந்தாக்குபவர்களுக்குதான் கிடைக்கும் என்று உத்தரகாண்டம் மாநில அரசியல் பிரமுகர் ஒருவர் கூறினார்.
திவாரி மக்களுக்கு அறிமுகமே இல்லாத பல பெண்களை அரசியல் உயர் பதவிகளுக்கு திடீரென கொண்டு வருவார். அவர்களும் இப்படி வந்தவர்கள்தான் என்று உள்ளூர் கட்சியினர் கூறுகின்றனர்.
அவரை சுற்றி எப்போதும் ஒரு நண்பர்கள் கூட்டம் உண்டு. அவர்கள் திவாரிக்கு வேண்டிய பெண்களை ஏற்பாடு செய்து கொடுப்பதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தனர் என்றும் சொல்கின்றனர்.
அவரது அலுவலகத்துக்கு வரும் பெண்களை வளைத்து விருந்தாக்கிய சம்பவமும் உண்டு. சமீபத்தில் ரோகித் சேகர் என்ற வாலிபர் திவாரி எனது தந்தை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவருடைய தாயார் உஜ்வாலா முன்னாள் மத்திய மந்திரி ஷேர் சிங்கின் மகள். உஜ்வாலா கட்சி பணியாக திவாரியை சந்திக்க சென்றபோது அவரை மடக்கி ஆசை நாயகியாக்கி கொண்டார்.
இளம் பெண்களை கட்டிப்பிடித்து தாண்டியா நடனம் ஆடுவதில் ஆர்வம் காட்டுவார். அப்போது பெண்களிடம் அத்துமீறுவதும் உண்டு என்று உத்தரகாண்டம் ஆதிவாசி அமைப்பின் தலைவி அவதாஷ் குஷால் புகார் கூறி இருக்கிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், டேராடூனில் உள்ள காட்டிலாகா ஆராய்ச்சி மைய விருந்தினர் மாளிகைக்கு செல்வார். அங்கு அவர் தவறான செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்றும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அவருக்கு எதிராக பாரதீய ஜனதா வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் திவாரியின் மோசமான நடத்தைகளை குறிப்பிடும் பாடல்களும், சில காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இந்த பாடல்களை பிரபல பாடகர் நரேந்திரசிங் ராஜி எழுதி பாடி இருந்தார். அப்போது 50 ஆயிரம் வீடியோ சி.டி. விற்பனையாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திவாரி ஆந்திராவில் “செக்ஸ்” புகாரில் சிக்கியதை அடுத்து அவரது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் பல்வேறு பத்திரிகைகளும் அவருடைய பழைய விவகாரங்களை கிளறி ஏராளமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
Monday, December 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment