Pages

Wednesday, December 23, 2009

பத்திரிகைகளில் அதிக இடம்பிடித்தவர் 10 ஆண்டு தொடர்ந்து பிரபலம் பாடகி மடோனா முதலிடம்

இங்கிலாந்து பத்திரிகைகளில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் இடம்பிடித்த பிரபலங்களில் மடோனா முதலிடம் பிடித்துள்ளார். அவரைப் பற்றி 45,633 அங்குல செய்திகள், படங்கள் வெளியாகின.
இங்கிலாந்து பத்திரிகைகளில் கடந்த 2000 முதல் இந்த ஆண்டு வரை அதிகளவில் செய்திகளில் இடம்பெற்ற பிரபலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பிரபல மாடல், பாடகியான மடோனா முதலிடம் பிடித்தார். அவர் தொடர்பான செய்திகள் 45,633 அங்குல அளவுக்கு பத்திரிகைகளில் இடம்பெற்றன.

கடந்த 10 ஆண்டுகளில் மடோனாவின் அதிரடி திருமணங்கள், அதைத் தொடர்ந்த விவாகரத்துகளால் அதிகளவில் செய்திகளில் அடி பட்டார். அடுத்த இடத்தில் ராபி வில்லியம்ஸ் இடம்பெற்றுள்ளார். அவர் பற்றிய செய்திகள் 27,976 அங்குலம் பிரசுரமாகின.

ராபியை விட மடோனாவைப் பற்றி 17,000க்கும் அதிகமான செய்திகள் பிரசுரமாகின. 3வது இடத்தை பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் பிடித்துள்ளார். செய்திகளில் அவர் 27,910 அங்குல இடம் பெற்றிருந்தார். பிராண்ட் பெக்காம் 4வது இடமும், கேத் மோஸ் 5வது இடமும் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment