Pages

Wednesday, December 23, 2009

சென்னையில் பிரம்மாண்ட நூலகம்


சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டு வரும் மாநில நூலகம், முதல்வர் பிறந்த நாளான வரும் ஜூன் மூன்றாம் தேதி திறக்கப்படுகிறது. சென்னை கோட்டூர்புரத்தில், 171 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் மாநில நூலகம் கட்டப்பட்டு வருகிறது. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் என்ற பெருமையைப் பெற உள்ள இந்நூலகத்தின் கட்டுமானப் பணிகளை, முதல்வரும், துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் அவ்வப்போது பார்வையிட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், "வரும் ஜூன் மூன்றாம் தேதியன்று, நூலகத் திறப்பு விழாவை நடத்துவதற்கு ஏற்ப, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நூலகத்திற்கு தேவையான நூல்களை தேர்வு செய்வதில், மிகுந்த கவனம் தேவை" என்று, அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
நூலகத்தின் திறப்பு தேதி குறித்து, ஏற்கனவே திட்டமிடப்படாத நிலையில், தற்போது ஜூன் மூன்றாம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் மூன்றாம் தேதி, முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் என்பதால், அந்நாளில் நூலகத்தை திறப்பதற்கு ஏற்ப, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. நல்ல செய்தி , சிங்கப்பூரில் படித்து வளர்ந்த நான் இங்கு வரும்போதெல்லாம் நினைப்பேன்.இங்கே என் நல்ல பெரிய நூலகம் இல்லை என்று.?,முதலில் அறிவிப்பு வந்தது.நான் வெறும் பேச்சுடன் மட்டும் நிற்கும் என்று நினைத்தேன்.இப்பொழுது திறக்க படும் செய்தி வந்ததும் மகிழ்ச்சி . இந்தியா வந்ததும் முதலில் அங்குதான் வருவேன். கல்வித்துறை மந்திரிக்கும் அரசுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும் மிருதுளா , சிங்கப்பூர்,

    ReplyDelete