Wednesday, December 23, 2009
உண்டியல் வசூல் 14 நாட்களில் 80 லட்சம் ரூபாயை எட்டியது
பழநி கோயில் உண்டியல் வசூல் 14 நாட்களில் 80 லட்சம் ரூபாயை எட்டியது. பழநி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. வசூல் வருமாறு; ரொக்கம் ரூ.79 லட்சத்து 47 ஆயிரத்து 548. தங்கம் 467 கிராம். வெள்ளி 2 ஆயிரத்து 982 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சி 717 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
தங்கத்தால் ஆன வேல், செயின், திருமாங்கல்யம், காவடி, வளையல், நாணயங்கள், வெள்ளி வேல், கொலுசு, கிண்ணம், காவடி, கண், குடை, மயில், வீடு போன்றவையும், பரிவட்டங்கள், பித்தளையால் ஆன பொருட்கள், ஏலக்காய் மாலை, கைக்கடிகாரம் உள்ளிட்டவையும் காணிக்கையாக செலுத்தப் பட்டிருந்தது. இந்த உண்டியல் வசூல் 14 நாட்களில் கிடைத்ததாகும். பழநி கோயில் இணை ஆணையர் தி.ராசமாணிக்கம், துணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி ஆணையர் நடராஜன், உள்ளிட்டோர் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment