Pages

Wednesday, December 23, 2009

ஒபாமாவிற்கு மேல் பிரிட்னி ஸ்பியர்ஸ்

இன்டர்நெட் தேடுதல் தளங்களான கூகுள், யாகூ, எம்எஸ்என் உட்பட பலவற்றிலும் அமெரிக்கர்கள் இந்த ஆண்டில் யாரைப் பற்றிய தகவல்கள், படங்களை அதிகளவில் தேடினார்கள் என்பதை கான்டக்ட் மியூசிக் என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது.
அதில் அதிபர் பராக் ஒபாமாவை விட இளம் பாப் பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் முன்னணி பெற்றார். 1998ல் 'பேபி ஒன்மோர் டைம்' என்ற தனது பாப் இசை ஆல்பம் மூலம் பிரிட்னி ஸ்பியர்ஸ் பிரபலம் ஆனார். பிறகு, அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாப் இசை ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்றார். பிரிட்னிக்கு அடுத்த இடத்தில் அதிபர் ஒபாமா இடம்பெற்றுள்ளார். கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் 3வது இடம் பிடித்தார்.

No comments:

Post a Comment