ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் கேட்டும், ஆந்திராவை பிரிக்க கூடாது என்று வலியுறுத்தியும் இரு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 2 வாரமாக ஆந்திராவில் போராட்டம் நடந்து வருகிறது. முதலில் தெலுங்கானா மாநிலம் கேட்டு கலவரம் நடந்தது. அதன் பிறகு ஆந்திராவை பிரிக்க கூடாது என்று வன்முறையில் இறங்கினர். இதனால் கடந்த ஒரு மாதமாக ஆந்திராவில் கொந்தளிப்பான நிலை இருந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தெலுங்கானா ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதனால் மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவாகி விட்டது.
ஆந்திராவில் கலவரத்தை அடக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். இதையடுத்து ஆந்திர போலீஸ் அதிகாரிகள் தமிழக போலீசின் உதவியை நாடினார்கள்.
ஆந்திராவின் கோரிக்கையை தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜெயின் ஏற்றுக்கொண்டு 4 கம்பெனி (400) போலீஸ் படையை அனுப்பி வைக்க சம்மதித்தார்.
இதில் 2 கம்பெனி (200 பேர்) போலீசார் ஏற்கனவே ஆந்திராவின் பல நகரங்களுக்கு போலீஸ் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து மேலும் 2 கம்பெனி போலீசார் வாகனங்களில் ஆந்திரா அனுப்பி வைக்கப்பட்டனர்.
கலவரத்தை அடக்குவதற்கு தேவையான உபகரணங்கள், கண்ணீர் புகை குண்டுகள் போன்றவற்றுடன் போலீஸ் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் ஐதராபாத், விஜயவாடா, வாரங்கல் உள்பட பல்வேறு நகரங்களுக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கிடையே ஆந்திராவில் தெலுங்கானா ஆதரவாளர்கள் அறிவித்துள்ள பந்த்தையொட்டி மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது. 1,150 துணை ராணுவப்படையினர் ஆந்திரா விரைந்துள்ளனர்.
இது தவிர ஜலந்தர், சண்டிகார் ஆகிய இடங்களில் இருந்து 10 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 28 கம்பெனி ஆந்திராவில் முகாமிட்டு உள்ளது. இப்போது கூடுதலாக ரிசர்வ் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் 38 கம்பெனி ஆந்திரா சென்றுள்ளது.
இவர்கள் ஆந்திராவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment