தெலுங்கானா இப்போது இல்லை என்று மத்திய அரசு அறிவித்ததை கேட்டதுமே தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகரராவ் தன் எம்.பி.யை பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து நடிகை விஜயசாந்தி, மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்களும் ராஜினாமா செய்தனர்.
தெலுங்கானாவில் மொத்தம் 12 காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் ஜெய்பால் ரெட்டி மத்திய மந்திரியாக உள்ளார்.
தெலுங்கானா குறித்து நேற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதும் முதலில் காங்கிரஸ் எம்.பி.க்களிடம் குழப்பம் ஏற்பட்டது. இருதரப்புக்கும் சாதகமான முடிவை மத்திய அரசு அறிவித்துள்ளதால் இனி எத்தகைய போராட்டத்திலும் ஈடுபட தேவை இல்லை என்று கருதினார்கள்.
காங்கிரஸ் எம்.பி.க்களின் தடுமாற்றத்தை அறிந்ததும் சந்திரசேகரராவ் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார். தெலுங்கானாவுக்காக ஒருங்கிணைந்து போராட அழைப்பு விடுத்தார். இதை காங்கிரஸ் எம்.பி.க்கள் ஏற்றுக்கொண்டனர்.
இன்று காலை டெல்லியில் தெலுங்கானா காங்கிரஸ் எம்.பி.க்கள் 11 பேர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தெலுங்கானாவை ஆதரித்து பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டது.
சோனியா காந்தியை சந்தித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவும் தீர்மானித்தனர்.
எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ள 11 காங்கிரஸ் எம்.பி.க்களும் கடிதங்களை யாரிடம் கொடுப்பது என்பதில் குழப்பத்தில் உள்ளனர். பாராளுமன்ற சபாநாயகரிடம் கொடுப்பதா அல்லது காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கொடுப்பதா என்று இன்னும் அவர்கள் முடிவு எடுக்கவில்லை.
11 எம்.பி.க்களும் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டியை சந்தித்து தங்கள் முடிவை கூறி உள்ளனர்.
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment