Pages

Thursday, December 24, 2009

ஈரானில் பின்லேடன் மனைவி- குழந்தைகள் கைது

பின்லேடனுக்கு பல மனைவிகள் மற்றும் குழந்தைகள், பேரக்குழந்தைகள் உண்டு. இவர்கள் அனைவரும் முன்பு ஆப்கானிஸ்தானில் பின்லேடனுடன் வசித்து வந்தனர்.

அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் படையெடுத்தபோது பின்லேடன் குடும்பத்தினர் பலர் தப்பி ஓடிவிட்டனர்.

அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. அவர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கி இருக்கின்றனர். அவர்களில் சிலர் ஈரான் நாட்டில் இருப்பதாக முன்பு தகவல்கள் வெளியாயின. ஆனால் பின்லேடன் குடும்பத்தை சேர்ந்த யாரும் எங்கள் நாட்டில் இல்லை என்று ஈரான் மறுத்தது.

ஆனால் இப்போது பின்லேடனின் ஒரு மனைவி 6 குழந்தைகள் 11 பேரக்குழந்தைகள் ஆகியோர் ஈரான் தலைநகரம் டெக்ரானில் இருப்பது தெரியவந்துள்ளது.

அவர்களை ஈரான் அரசு கைது செய்து ரகசிய இடத்தில் வீட்டுக்காவலில் வைத்து உள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

பின்லேடன் குடும்பம் இங்கு இருப்பது தெரிந்தால் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து தொல்லை வரலாம் என கருதி ஈரான் அரசு இந்த தகவலை மறைத்து விட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment