
"சினிமாவில் நல்ல குணசித்திர வேடத்தில் நடித்து புகழ்பெற வேண்டும் என்பதற்காக வந்தேன். ஆனால் வாழ்க்கை திசைமாறி கவர்ச்சி நடிகையானேன். ஒரு கால கட்டம் வரை மலையாள சினிமாவில் முக்கியமான இடத்தில் இருந்தேன். மம்மூட்டி, மோகன்லால்தான் என்னை விரட்டி விட்டார்கள் என்பதெல்லாம் தவறான கருத்து. என்னுடைய சீசன் மலையாளத்தில் முடிந்துவிட்டது என்றுதான் சொல்வேன். ரசிகர்களும் எத்தனை நாளைக்குத்தான் என் கவர்ச்சியை ரசித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் நானும் எனது பாதையை மாற்றிக் கொண்டு நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன்.
இதுநாள் வரை எனது அம்மா எனக்கு துணையாக இருந்தார். எனக்கு சமையல் கூட செய்யத் தெரியாது. அம்மாதான் அதையெல்லாம் பார்ப்பார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அம்மாவை இழந்துவிட்டேன். அம்மாவை என்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என பயந்து இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்போது ஒரு தொழிலதிபரை காதலிக்கிறேன். இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். அவரின் அனுமதியோடு அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன்"
No comments:
Post a Comment