கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த எம்.ஜி.ஆர்., இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கிறார். www.whopopular.com எனும் வெப்சைட் நடத்திய சர்வேயில், மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கும் அரசியல் தலைவர்களில் எம்.ஜி.ஆர்., முதல் இடம் பெற்றுள்ளார்.
இந்த வெப்சைட்டில் 12 தலைப்புகளில் சர்வே நடந்து வருகிறது. அவை. 1. தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள், 2. நடிகர்கள், 3. இசைக் கலைஞர்கள், 4. கால்பந்து வீரர்கள், 5. தடகள வீரர்கள் 6. எழுத்தாளர்கள் 7.நடிகைகள் 8. கல்வியாளர்கள் 9. இயக்குனர்கள் 10. கூடைப்பந்து வீரர்கள் 11. வர்த்தகர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் 12. பத்திரிகையாளர்கள். சிறந்த இசைக் கலைஞராக மைக்கேல் ஜாக்சனும், சிறந்த விஞ்ஞானியாக அப்துல் கலாமும், சிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கரும் தேர்வாகியுள்ளனர். மொத்தமுள்ள 12 பிரிவுகளிலுமே அதிகபட்சமாக, எம்.ஜி.ஆருக்கு 30 ஆயிரத்து 744 ஓட்டுகள் கிடைத்துள்ளன.
Wednesday, December 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment