Pages

Wednesday, December 23, 2009

இடை தேர்தலில் டிபாசிட்டை இழந்தார் விஜயகாந்த் ?

திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி! இரண்டாமிடத்தைப் பிடிப்போம், 2011ல் ஆட்சியைப் பிடிப்போம் என்ற கனவோடு, இடைத்தேர்தல் களம் கண்ட தே.மு.தி.க., இரு தொகுதிகளிலும் டிபாசிட்டை பறிகொடுத்து காணாமல் போயுள்ளது.


திருச்செந்தூர் தொகுதியின் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் அக்கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் சேர்ந்தார். தனது எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார். திருச்செந்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, டிச.,19ல் தேர்தல் நடந்தது. தி.மு.க., சார்பில் அனிதா ராதாகிருஷ்ணனும், அ.தி.மு.க., சார்பில் அம்மன் நாராயணனும், தே.மு.தி.க., சார்பில் கோமதி கணேசனும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. முடிவில், தி.மு.க., வேட்பாளர் அனிதா ராதா கிருஷ்ணன், அ.தி.மு.க., வேட் பாளர் அம்மன் நாராயணனை விட 46,861 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தே.மு.தி.க., வேட்பாளர் கோமதி கணேசன் மற்றும் 22 சுயேச்சைகள் டிபாசிட் இழந்தனர்.


ஓட்டு விவரம்:
மொத்த ஓட்டு: 1,40,150
பதிவானவை: 1,10,951 (அதில் 49 ஓ எண்ணிக்கை - 20)
அனிதாராதாகிருஷ்ணன் (தி.மு.க.,): 75,223
நாராயணன் (அ.தி.மு.க.,): 28,362
கோமதிகணேசன் (தே.மு.தி.க.,): 4,186



வந்தவாசி தொகுதி (தனி) தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயராமனின் மறைவையடுத்து, அத்தொகுதிக்கும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க., சார்பில் கமலக் கண்ணனும், அ.தி.மு.க., சார்பில் முனுசாமியும், தே.மு.தி.க., சார்பில் ஜனார்த்தனமும் போட்டியிட்டனர். வந்தவாசி தொகுதிக்கு நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கை முடிவில், தி.மு.க., வேட்பாளர் கமலக்கண்ணன், அ.தி.மு.க., வேட்பாளர் முனுசாமியை விட கூடுதலாக 38 ஆயிரத்து 17 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தே.மு.தி.க., வேட்பாளர் ஜனார்த்தனம் 7,063 ஓட்டுகள் பெற்று டிபாசிட் இழந்தார்.


ஓட்டு விவரம்:
மொத்த ஓட்டு: 1,58,210
பதிவான ஓட்டு: 1,32,750
கமலக்கண்ணன் (தி.மு.க.,): 78,827
முனுசாமி (அ.தி.மு.க.,): 40,810
ஜனார்த்தனம்(தே.மு.தி.க.,): 7,063

No comments:

Post a Comment