விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைய வந்த போது, அவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா., விளக்கம் கேட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த விளக்கம் தொடர்பாக, அதிபர் ராஜபக்ஷே அலுவலகம் ஆய்வு செய்து வருவதாகவும், தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பதாகவும், இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
புலிகளுக்கு எதிரான போர் கடந்த மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. கடைசி கட்ட போரின் போது விடுதலைப்புலி தலைவர்கள் சரணடைய வந்ததாக இலங்கை அரசு தெரிவிக்கவில்லை. புலித்தலைவர்கள் அனைவரும் புலிகளை எதிர்த்த மற்ற போராளிகளால் கொல்லப்பட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தது. "சரணடைய வந்த புலிகள் தலைவர்களை கொன்றுவிடும்படி, ராஜபக்ஷேயின் தம்பியும் பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபய ராஜபக்ஷே உத்தரவிட்டார்', என முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை மேற்கோள் காட்டி, பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அதுவரை கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளை, இது நிரூபிப்பது போல் ஆனது. இவ்விஷத்தில், பொன்சேகா காட்டி கொடுத்து விட்டார் என்று, அரசு தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்து பொன்சேகா போட்டியிடுகிறார். "நான் சொன்ன தகவல்களை பத்திரிகைகள் வேறுவிதமாக எழுதிவிட்டன' ,என்று பொன்சேகா கூறியிருக்கிறார்.
இவ்விவகாரத்தில், தற்போது பல்வேறு கருத்துகள் நிலவுவதால், இதுபற்றி விரிவான விளக்கம் தேவை என ஐ.நா., கோரியுள்ளது. கடைசி கட்ட போரின் போது,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள், வீரர்கள் மற்றும் குடும்பத்தாரின் மரணம் குறித்தும், 7 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டது குறித்தும், ஐ.நா., கேள்வி எழுப்பியுள்ளது. போர் விதிமுறைகளும், மனித உரிமை மீறல்களும் அங்கு நடந்துள்ளன, என்று ஐ.நா., கருதுகிறது.ஆதாரமில்லாத போர்: இலங்கை ராணுவத்தின் இறுதிக்கட்ட தாக்குதலின் போது, அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. போர்க்களத்தில் எந்த ஒரு மீடியாவையும் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.
இதனால், இந்த போரை மேற்கத்திய நாடுகள் "ஆதாரமில்லாத போர்" ,என கருதுகின்றன. போரைப் பற்றி அறிய சென்ற அமைதிகுழுக்களிடம், இலங்கை அரசு உண்மை நிலவரத்தை மறைத்துள்ளது என்ற சந்தேகம் இதன் காரணமாக எழுகிறது. இதனால், இந்த போரை பற்றிய விரிவான விளக்கம் தேவை" என்று ஐ.நா., வலியுறுத்தியுள்ளது.
Wednesday, December 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment