இதில், செட்டிகுளம் என்ற இடத்தில் உள்ள முகாமில் இருந்த சிலர் சமையலுக்கு விறகு சேகரிக்க சென்றனர். அப்போது ராணுவத்தினர் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்கள். இதில் 3 குழந்தைகள் 2 பெண்கள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல ஒரு முகாமில் இருந்த மக்கள் சிலர் அருகில் இருந்த முகாமுக்கு செல்ல முயன்றனர். அவர்கள் மீதும் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த சம்பவத்தால் அகதி முகாம்களில் பதட்டம் நிலவுகிறது.

No comments:
Post a Comment