தெலுங்கானா பிரிவினை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இருப்பவர்களில் மாணவர்கள் முதன்மையாக உள்ளனர். தெலுங்கானா அரசியல் தலைவர்கள் அனைவரும் மாணவர்களையே நம்பி உள்ளனர். இந்த நிலையில் மாணவர்களை போராட்டத்தை தொடர்ந்து நடத்துமாறு நக்சலைட்டுகள் தூண்டி வருகின்றனர். இது தொடர்பாக நக்சலைட் இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான கோடீஸ்வரராவ் கூறி இருப்பதாவது:-
தெலுங்கானா மாநிலம் உருவாக்கித்தருவதாக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து நம்மை ஏமாற்றி வருகிறார்கள். நேரு காலத்தில் இருந்து இந்த நிலை நீடிக்கிறது. இனியும், இந்த நிலை தொடரக்கூடாது.
தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்கும் வரை மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கை விடக்கூடாது. எந்த நிலையிலும் மாணவர்கள் பின் வாங்கக்கூடாது.
தெலுங்கானா மாநிலம் அமைவது மாணவர்கள் கையில்தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஐதராபாத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களிடையே நக்சலைட்டுகள் சிலர் ஊடுருவி இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Indian Gongress which is lead by Mrs.Rajiv Ganthi not fit enogh to control the other state's demands.Simply we can say they don't have any commond over them.This is the right time to quite the politics and place President rule in Andhra.
ReplyDelete