அவர் அறிவுரைபடி 4 வகையான மாத்திரைகளை பேசின் பிரிட்ஜ் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள சித்ரா மெடிக்கல் வாங்கினார். 2 நாட்கள் மருந்து மாத்திரை உட்கொண்டும், குழந்தைக்கு காய்ச்சல் தீரவில்லை. 3-வது நாள் திடீரென குழந்தை கிருத்திகா பரிதாபமாக பலியானாள்.
குழந்தைக்கு கொடுத்த மாத்திரைகளை பார்த்த போது அவைகாலா வதியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும் குழந்தை உடலை முறைப்படி அடக்கம் செய்தனர். காலாவதியான மாத்திரைகளால் தான் குழந்தை இறந்து விட்டது என்று கூறி டில்லிபாபு புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தார். துணைகமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் உதவிகமிஷனர் சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இதற்கிடையே குழந்தை இறந்ததற்கான காரணத்தை அறிய புதைக்கப்பட்ட குழந்தை கிருத்திகாவின் உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். ஆர்.டி.ஓ. முன்னிலையில் இன்று மாலை தோண்டி எடுக்கிறார்கள். அதன் பிறகுதான் குழந்தை இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று உயர்போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே குழந்தைக்கு சிகிச்சை அளித்தடாக்டர் கணேஷ் கிளினிக்கையும், சித்ரா மெடிக்கல் உரிமையாளர் கடையையும் மூடிவிட்டு தலை மறைவாகிவிட்டனர்.
தாய்கலைவாணி "நான் கடந்தவாரம் என் குழந்தை கிருத்திகா தேவதர்சினியை டெமலஸ் சாலையில் உள்ள டாக்டரிடம் அழைத்துச்சென்றேன். குழந்தைக்கு சளி-காய்ச்சல் இருப்பதாக கூறினேன். அவர் மாத்திரை எழுதிக்கொடுத்தார். அதை அருகில் உள்ள மருந்து கடையில் வாங்கினேன். அந்த மாத்திரை அக்டோபர் மாதமே காலாவதியாகி விட்டது.
அதை டிசம்பர் மாதம் கொடுத்துள்ளனர். அது தெரியாமல் நானும் குழந்தைக்கு கொடுத்தேன். இதில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்செயலாக மாத்திரையை பார்த்த போது காலாவதியான மாத்திரை என்று தெரிய வந்தது.
2 நாளில் குழந்தை இறந்து விட்டது. மருந்து கடையில் போய் கேட்டதற்கு சரியான பதில் தரவில்லை. இதற்கிடையே எனது அண்ணன் சங்கர் அதே கடையில் சென்று மாத்திரை பெயரைச் சொல்லிவாங்கிய போது அதே போல் காலாவதியான மாத்திரையை கொடுத்தனர். இதனால் நாங்கள் போலீசில் புகார் செய்தோம். இதனால் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக போலீசில் புகார் செய்தோம். மருந்து கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் "
இவ்வாறு கலைவாணி கண்ணீர் மல்க கூறினார்.

photo : courtesy : maalaimalar.com
No comments:
Post a Comment