விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் செல்வராஜா பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு படையினரால் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், புலிகளுக்கு சொந்தமாக ஐந்து கப்பல்கள் இருப்பது தெரிந்தது. அதில் ஒரு கப்பலை இலங்கை கடற்படை சமீபத்தில் பறிமுதல் செய்தது. அந்த கப்பல், நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. "பிரின்சஸ் கிறிஸ்டினா' என்ற அந்த பிரம்மாண்ட கப்பல், புலிகளுக்காக ஆயுதம் கடத்த பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கப்பல் தொடர்பான மேலும் பல புதிய தகவல்களை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மே மாதம், புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள், இலங்கையில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். கடல் வழியாக தப்பிப்பதே பாதுகாப்பானது என, முடிவு செய்த அவர்கள், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள பிரின்சஸ் கிறிஸ்டினா கப்பலை இதற்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்தனர். பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் செல்வதற்காக இந்த கப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே பிரபாகரன் உள்ளிட் டோர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment