Thursday, December 24, 2009
ஷாருக்கான் பாய்ந்து போய் அசின் கையை பற்றி இழுத்து
மும்பையில் தனியார் அமைப்பு நடத்திய விழா ஒன்றில் இந்தி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். முக்கியஸ்தர்கள் மேடைக்குவர தனி வழி ஏற்பாடு செய்து இருந்தனர். அசின் தாமதமாக வேறு பாதையில் வந்தார். அங்கு ரசிகர்கள் நின்று கொண்டிருந்தனர்.அசினை பார்த்ததும் அவரை நோக்கி ஓடினார்கள். விழா ஏற்பாடு செய்தவர்கள் யாரும் இல்லை.
அசினை முற்றுகையிட்ட ரசிகர்கள் நடிப்பை புகழ்ந்தனர். சிலர் அத்துமீறி உடம்பை தொட்டனர். கையை பிடித்தும் இழுந்தார்கள். சுமார் 300 பேர் அசினை சுற்றி நின்றார்கள். பின்னால் நின்றவர்கள் முண்டியடித்து வர முயன்றதால் முன்னால் நின்றவர்கள் அசின் மேல் விழுந்து அமுக்க பார்த்தார்கள். அவர்களிடம் மாட்டிக்கொண்டு தவித்தார் அசின்.
அப்போது அந்த வழியாக ஷாருக்கான் வந்தார். அவர் அசின் ரசிகர்கள் பிடியில் சிக்கியதை கண்டு அதிர்ந்தார். உடனடியாக தன்னுடன் வந்த பாதுகாவலர்கள் எட்டு பேரை அனுப்பி அசினை மீட்க உதவினார். அவர்கள் கூட்டத்தினரை தள்ளி விட்டு அசினை சுற்றி அரண்போல் கைகோர்த்து நின்றனர்.
ஷாருக்கான் பாய்ந்து போய் அசின் கையை பற்றி இழுத்து மேடைக்கு அழைத்து சென்றார். ஷாருக்கான் பொதுகாவலர்கள் கூட்டத்தினர் மத்தியில் வி.ஐ.பி.க்களை எவ்வாறு அழைத்து செல்வது என்பதில் விசேஷ பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேடைக்கு வந்தபின் நீண்ட நேரம் ஷாருக்கனும் அசினும் பேசிக்கொண்டு இருந்தனர்.
பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பாதுகாப்புக்கு இரண்டு செக்யூரிட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஷாருக்கான் ஆலோசனை கூறினார். அதை அசின் ஏற்றுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment