Pages

Wednesday, December 23, 2009

தமிழ் சினிமாவின் சீரிய வளர்ச்சி

முன்‌பெல்லாம் சினிமாக்களில் தலையிலும், கையிலும் சத்தியம் செய்து வந்த ஹீரோக்கள், இனி சத்தியத்திற்கு புது ஸ்பாட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த இடம் தொப்புள்தான். முதன் முறையாக தமிழ் சினிமாவில் இந்த புது ட்ரெண்ட்டை அறிமுகப்படுத்துகிறது சங்கரா என்ற படம். சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் சங்கரா படத்தை டைரக்டர் ராஜ் கண்ணன் இயக்குகிறார். கதைப்படி ஹீரோயின் அர்ச்சனா, வாசனை வலியச் சென்று காதலிக்கிறார். காதல் ஜோடிகளுக்கு இடையே சந்தேகப் பேய் நுழைகிறது. வாசன் கார்த்திக் நல்லவனா, கெட்டவனா? என்ற சந்தேகம் அர்ச்சனாவுக்கு வருகிறது. இதனால், ஊரார் வழக்கப்படி என் தொப்புளில் முத்தம் கொடுத்து சத்தியம் செய் என்று நாயகன் வாசனிடம் சொல்கிறார். வாசனும், அர்ச்சனாவுக்கு தொப்புளில் முத்தம் கொடுத்து சத்தியம் செய்கிறார்.

No comments:

Post a Comment