
கறுப்பு பணத்தை பதுக்குபவர்களை கண்டறிய, சுவிட்சர்லாந்து, மொரீசியஸ் உட்பட 25 நாடுகளுடனான வரி தொடர்பான சட்ட ரீதியான உடன்பாடுகளை மறுசீரமைக்க, இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில், வரி ஏய்ப்பு செய்த கறுப்பு பணத்தை, சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கில் போட்டு வைத்திருப்பவர்கள் குறித்த தகவல்களை பெற, இந்திய அரசு ஆரம்ப கட்ட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது . சுவிஸ் வங்கிகளில் இருந்த கறுப்புப் பணத்தை மீட்பதில் அமெரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது. தங்கள் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து, சுவிஸ் வங்கி கிளைகளில் ரகசிய கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை பெற்றது. இதே போன்று இந்தியாவும், சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை பெற முயன்று வருகிறது. ஆனால், அது தொடர்பாக பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்து முடிந்த லோக்சபா பொது தேர்தல் பிரசாரத்திலும், இந்த கறுப்பு பணம் விவகாரம் முக்கிய பங்கு வகித்தன. சுவிஸ் வங்கியின் ரகசிய கணக்குகளில், இந்தியர்களின் கறுப்பு பணம், பல கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக, பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகள் தெரிவித்தன. எனினும், சுப்ரீம் கோர்ட்டில் கறுப்பு பணம் தொடர்பான மனு மீதான விசாரணையின் போது, அரசு சார்பில் அளிக் கப்பட்ட பதிலில்," சுவிஸ் வங்கியில், வரி ஏய்ப்பு செய்த இந்தியர்கள், எவ்வளவு தொகை பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரியவில்லை " என, தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment