
மத்திய அரசு வழங்கி வந்த சாகித்ய அகடமி விருது, இனி கொரிய நிறுவனமான "சாம்சங்' மூலம் வழங்கப்பட உள்ளது. பல்வேறு மொழியில் இலக்கியத்துறையில் சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகடமி விருதுகளை மத்திய கலாசாரத்துறை வழங்கி வருகிறது. ஆனால், இந்த முறை தாகூர் இலக்கிய விருது என்ற பெயரில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. ரவிந்திரநாத் தாகூர் மீது மரியாதை கொண்ட தென்கொரிய நிறுவனமான "சாம்சங்' இந்த விருதுகளை வழங்க மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வழக்கம் போல் சாகித்ய அகடமி குழுவில் உள்ளவர்கள் பரிசுக்குரிய நபர்களை தேர்வு செய்வர். அவர்களுக்கு ரொக்கப்பரிசை, சாம்சங் நிறுவனம் வழங்கும், என அகடமி விருது குழு அதிகாரி கே.எஸ். ராவ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment