

கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்காக புகைப்படம், கைரேகை பதிய நடந்த சிறப்ப முகாமில், ஏராளமான அரவாணிகள் குவிந்தனர். அரவாணிகள் வாழ்க்கை உயர, பல வகைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கு இலவச கல்வி, மருத்துவ வசதி, பாலினம் மாற்றிக் கொள்ள இலவச அறுவை சிகிச்சை உட்பட பல சலுகைகளை மாநில அரசு வழங்கியுள்ளது. தற்போது, உயிர் காக்கும் உயர் சிகிச்சை திட்டத்திலும் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தில் அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. 14ம் தேதி நிலவரப்படி, சென்னையில் இதுவரை மூன்று லட்சத்து 35 ஆயிரத்து 89 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், நலவாரிய உறுப்பினர்களான மீனவர் நலசங்க உறுப்பினர்கள் 25,118, ஊனமுற்றோர் நலச்சங்க உறுப்பினர் 827, நாட்டுப்புற கலைஞர் சங்க உறுப்பினர்கள் 136, இதர நலசங்க உறுப்பினர்கள் 27,669 பேர் அடங்குவர்.
அதே போல், அரவாணிகளுக்காக புகைப்படம், கைரேகை எடுக்கும் சிறப்பு முகாம் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமை கலெக்டர் �ஷாபனா துவக்கி வைத்தார். 350 அரவாணிகள் கலந்து கொண்டனர். துணை கலெக்டர் சொக்கன், மாவட்ட சமூக நல அலுவலர் ஜெம்மா டிசில்வா முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment