இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஆர். கார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
சென்னையை அடுத்த பாடியில் எனது தந்தை 2.37 ஏக்கர் நிலத்தை வாங்கினார். கொரட்டூர் சுற்றுப்புற பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நிலத்தை தமிழக அரசு 18.01.69-ல் கையகப்படுத்தியது.
இதில் 6 கிரவுண்ட் நிலத்தை 34 ஆண்டுகளாக வீட்டு வசதி வாரியம் பயன்படுத்தவில்லை. எங்களிடம் வேறு எந்த நிலமும் தற்போது இல்லை.
இதையடுத்து சட்டப்படி, அந்த நிலத்தை எங்களிடம் ஒப்படைக்கக் கோரி 15.11.06-ம் தேதி மனு அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கில், எங்களின் மனு மீது உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர், வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர் எங்கள் கோரிக்கையை நிராகரித்து எங்களுக்கு 04.03.08-ம் தேதி கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், எங்களிடமிருந்து பெறப்பட்ட நிலத்தில் (சர்வே எண் 194/2) கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுற்றப்புறச் சுவர் எழுப்பப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது, நடிகர் விஜய்க்கு வீட்டு வசதி வாரியம் 0.27 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளதாக தெரியவந்தது.
இந்த நிலத்தை "திராவிடம் பஞ்சாயத்து திட்டத்துக்காக' வழங்கியுள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர் தெரிவித்திருந்தார்.
வீட்டு வசதி வாரியம் எந்த ஒரு தனி நபருக்கும் ஒரு கிரவுண்ட் நிலம் மட்டுமே வழங்க முடியும். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு விதிமுறைகளை மீறி 0.27 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, விஜய்க்கு நிலம் வழங்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; அந்த நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி பி. ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வீட்டு வசதி வாரியம், நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இதுதாங்க ஏழை விஜய் வீடு ! அவரக்கு வீடு நிலம் ஒதிக்கினா கோப படறீங்களே ?
-நக்கல் நாகராசன்
No comments:
Post a Comment