Pages

Thursday, November 5, 2009

நமீதா

மலையாளத்தின் பிரபல இரட்டை இயக்குநர்கள் பிரமோத்-பப்பன் ஆகியோர் "நில், கவனி, என்னை காதலி' படத்தின் மூலம் தமிழில் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இதில் "ஜெகன்மோகினி' படத்துக்குப் பிறகு நமீதா கதாநாயகியாக நடிக்கிறார்.

"அன்பு' பாலா கதாநாயகனாக நடிக்கிறார். கலாபவன் மணி, பவன், ஆசிஷ்வித்யார்த்தி, "பிதாமகன்' மகாதேவன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் முதலில் மலையாளத்தில் உருவாகவிருந்தது. பிறகு, நமீதாவின் முக்கியத்துவம் கருதி தமிழிலேயே படம் உருவாகி வருகிறது.

திருப்பூரில் குடும்பத்துடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் நாயகியை ஒரு போலீஸ் அதிகாரி கட்டாயத் திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அதற்கு அவள் மறுக்கவே, நாயகியின் தந்தையை சுட்டுக்கொல்கிறார் போலீஸ் அதிகாரி. இதையடுத்து அந்தப் போலீஸ் அதிகாரியை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு, பழிவாங்கும் நாயகியைப் பற்றியதே கதை. இதில் நமீதா ஆக்ஷன் நாயகியாக வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்.

No comments:

Post a Comment