Pages

Thursday, November 5, 2009

இந்தியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு மரண தண்டனை

சவுதி அரேபிய பெண்ணை கொலை செய்த ஒரு இந்தியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் சொன்னது " கேரளாவைச் சேர்ந்தவர் முகமது நவுஷாத். இலங்கையைச் சேர்ந்தவர்கள் பந்தர் மற்றும் ஹலிமா. இவர்கள், சவுதியில் பணிபுரிந்து வந்தனர். 2005ல் இவர்கள், மேலும் சிலருடன் சேர்ந்து, சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை கொலை செய்தனர்.


இதையடுத்து, இவர்கள் மூவருக்கும் சவுதி கோர்ட் மரண தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், முகமது நவுஷாத்துடன், இலங்கையைச் சேர்ந்த இருவருக்கும் சேர்த்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மூவரும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்"


சவுதியில் இந்தியர்களுக்கு இது போன்ற மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தடுக்க தூதரகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. மரண தண்டனையை குறைக்க வேண்டும் என, இவர்கள் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அது நிராகரிக்கப்பட்டு விட்டதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன .

No comments:

Post a Comment