Pages

Thursday, November 5, 2009

ராமாயணத்தை திருத்தலாமா ? மடாதிபதி தலைக்கு மேலே தொங்கும் கத்தி ?

துளசிதாசர் ராமாயணத்தை திருத்திய மடாதிபதி மீது துறவியர்கள் கூட்டமைப்பு கடும் கோபத்தில் இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம், சித்ரகூடம் என்ற இடத்தில் உள்ள "துளசிபீடம்' என்ற மடத்தின் மடாதிபதி ஜகத்குரு ராமநாதாசார்ய சுவாமி ராமபத்ரசயா (60) என்பவர். பார்வையற்ற இவர் வாரணாசியிலுள்ள சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலையில் படித்து தங்கப் பதக்கம் பெற்றவர்.


பிஎச்.டி., மற்றும் டி.லிட்., முடித்தவர். சித்ரகூடத்திலுள்ள, ஊனமுற்றோருக்கான பல்கலையின் துணைவேந்தர்; அங்குள்ள பார்வையற்றோர் கல்லூரிகளோடு நெருங்கிய தொடர்புடையவர்; அந்தப் பகுதியில் மிகப் பிரபலமானவர்; 80 புத்தகங்கள் எழுதியவர். சுவாமி ராமநாதர், 387 ஆண்டுகளுக்கு முன் மறைந்த கோஸ்வாமி துளசிதாசரின் புகழ்பெற்ற "ராமசரித மானஸ்' என்ற ராமாயணத்தைத் திருத்திய பதிப்பாக கோரக்பூர் கீதா பிரஸ் மூலம் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிப்புதான் சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. ராமசரித மானசில் பெரும்பகுதியை இவர் திருத்தியிருக்கிறார்;


பல முக்கியமான பகுதிகளை நீக்கிவிட்டார் என்றும் இவர் மீது குற்றப்பத்திரிகை சுமத்தியிருக்கிறது "அனைத்திந்திய அகாடா பரிஷத்!' "சுவாமி ராமநாதர், ராமசரித மானசில் மூவாயிரம் பிழைகளைக் கண்டுபிடித்துள்ளார். "அவருக்கு எவ்வளவு துணிவிருந்தால், ராமதாசரின் படைப்பிலேயே குறை கண் டிருப்பார்? இந்தக் குற்றத் துக்குப் பரிகாரமாக, அவர் நவம்பர் 8ம் தேதி, அயோத்யாவில் கூடும் துறவியர்கள் கூட்டத்தில் நிபந் தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். "இல்லையெனில், அவர் தனது மடாதிபதி பதவியைத் துறக்க வேண்டும்' என்று அறிக்கை விட்டிருக்கிறது அகாடா பரிஷத்.



நடந்தது என்ன? கீதா பிரஸ்ஸின் ஆலோசகரும், புராண நிபுணருமான சுனிதா சாஸ்திரி, அந்தப் பதிப்பில் அயோத்யா காண்டமே இல்லை என்கிறார். "கதாவாசக' பிரேம் பூஷண்ஜி என்பவர், சில நிறுத்தக் குறியீடுகளையும், எழுத்துக்களின் மாத்திரைகளையும் மட்டுமே சுவாமி மாற்றியிருப்பதாக கூறுகிறார். சுவாமி ராமநாதர்,"இந்தப் பதிப்புக்காக நான் 50 ராமாயணப் பதிப்புக்களை ஆராய்ந்துள்ளேன். எவ்வித நிர்பந்தமும் இல்லாத நிலையில்தான் ஒரு பதிப்பாசிரியன் தான் உணர்ந்த வகையில், அந்த நூலைத் திருத்த உரிமை பெற்றிருக்கிறான். இந்த மிரட்டல்களுக்கு நான் அடிபணியப் போவதில்லை. இவர்கள் என்னிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர். நான் ஒன்றும் இவர்கள் அடிமையல்ல' என்று பதிலளித்திருக்கிறார்.

No comments:

Post a Comment