Pages

Thursday, November 5, 2009

பூமிகாவுக்கு ‌தேசிய விருது

கல்யாணம் முடிந்த கையோடு கலைச்சேவையாற்றி வரும் பூமிகாவுக்கு ‌தேசிய விருது வாங்குவதுதான் லட்சியமாம். தற்போது பூமிகாவுக்கு தமிழிலும், தெலுங்கிலும் கைவசம் 6 படங்கள் உள்ளன. தமிழில் தங்கர்பச்சான் இயக்கி வரும் களவாடிய பொழுதுகள் படத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிக்கிறார். இதுதவிர, தகிட தகிட என்ற தெலுங்குப் படத்தைத் தயாரித்து வருகிறார். தனது அடுத்த இலக்கு குறித்து பூமிகா அளித்துள்ள பேட்டியில், நான் தேசிய விருது பெற்ற நடிகை என்ற பெயரைப் பெற வேண்டும். இதுவரை பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் தேசிய விருதுதான் எனது லட்சியம். அதனால் அதற்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். அதையடுத்து நானே கதை எழுதி ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது இன்னொரு கனவு. அதற்காக கதை தயார் செய்து வருகிறேன். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இயக்குநர் ஆவேன்'' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment