Pages

Saturday, November 7, 2009

தன் இறுதிச்சடங்கை பார்த்தவர்

எங்க வீட்ல என்ன இவ்ளோ கூட்டம் என்றபடியே வந்தவரிடம், அடமிரின் இறுதிச் சடங்கு நடக்குது என்றார் ஒரு உறவினர், விசாரித்தவர்தான் அந்த அடமிர் என்பதை உணராமலே! இந்தக் கூத்து பிரேசில் நாட்டில் நேற்று நடந்தது. பிரேசில் நாட்டில் நேற்று முன்தினம் நடந்த கார் விபத்தில் ஒருவர் பலியானார். அந்தக் காரை ஓட்டிச் சென்ற அடமிர் என்பவரின் உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டது. மோசமாக முகம் சிதைந்த பிணத்தை பார்த்த குடும்பத்தினர், உடையை வைத்து அடமிர்தான் என உறுதி செய்தனர். பிறகு, இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். எல்லாம் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், காரைக் காணாமல் அதை விட்ட இடத்தில் விசாரித்துக் கொண்டிருந்தார் அடமிர். கார் விபத்தில் சிக்கி நீ பலியாகி விட்டதாக தெரிந்தது. வீட்டில் உனக்கு இறுதிச் சடங்கு நடக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
லண்டன்:
உடனடியாக, வீடு திரும்பிய அடமிர், வாசலில் நின்ற கூட்டத்தில் ஒருவரிடம் விசாரித்ததை மேலே படித்திருப்பீர்கள். நடந்தது என்னவென்றால், காரை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் மது பாருக்குப் போயிருக்கிறார் அடமிர். காருக்குள் ஒருவர் ஏறி ஓய்வெடுத்த போது, பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விபத்தில் இறந்தவரும், அடமிரும் ஒரே மாதிரி உடை அணிந்திருந்ததே குழப்பத்துக்கு காரணம். முகம் தெரியாததால் உடையை வைத்து குடும்பத்தினர் அடையாளம் காட்டினர் " என்றார். நல்லவேளையாக, அடமிர் வீடு திரும்பியதால், பிணத்தின் ஒரிஜினல் சொந்தக்காரர் யாரென அடையாளம் காணப்பட்டு, உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஏரியாவில் இப்போது அடமிரை பார்ப்பவர் எல்லாம், சே... தனது இறுதிச் சடங்கையே பார்த்தவன்யா என்று கமென்ட் அடிக்கின்றனர்.

No comments:

Post a Comment