Pages

Saturday, November 7, 2009

கருணாநிதியின் பெற்றோர் சிலை

ராதாபுரத்தில். முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் சிலை திறந்துவைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில், அரசு செலவில் 70 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது.


அந்த பஸ் ஸ்டாண்ட் அமையும் நிலத்தை, தொகுதி எம்.எல்.ஏ.,வான அப்பாவு(தி.மு.க.,) சொந்த நிதியில் வாங்கிக் கொடுத்தார். இதனால், அவரது விருப்பப்படி பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதியின் பெற்றோர் முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் பெயர் வைக்கவும், அங்கு அவர்களது முழு உருவச் சிலைகளை தமது சொந்த செலவில் நிறுவினார். சிலைகளை திறக்க உள்ளூர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைக்கும்படியும், காமராஜர், கக்கன்ஜி ஆகியோர் சிலைகளை அமைக்கும்படியும் கோரிக்கை வைத்தனர். இதனால், கடந்த அக்.,,13ல் துணைமுதல்வர் ஸ்டாலின் ராதாபுரம் பஸ் ஸ்டாண்டை திறந்து வைக்கும்போது அதற்கு எந்த பெயரையும் அறிவிக்கவில்லை. அவரது தாத்தா, பாட்டியின் சிலைகளையும் திறக்காமல் சென்றுவிட்டார். இதனால், அந்த விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுவரையிலும் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பொறுப்பில் இருந்த பஸ் ஸ்டாண்ட், நேற்று முறைப்படி ராதாபுரம் கிராம ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி, ஊராட்சி கவுன்சிலர்களின் கூட்டம் தலைவர் சிவக்குமார்சிவபாலன் தலைமையில் நடந்தது. முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் சிலைகளை திறக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக சிலைகளை அவரே திறந்து வைத்தார். இதில் கிராம மக்களும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment