Pages

Saturday, November 7, 2009

கமலஹாசனின் இரட்டை வேடம்

சென்னை, நவ.7: நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 55-வது பிறந்தநாளை ஆரவாரமின்றி குடும்பத்துடன் கொண்டாடியதாகத் தகவல்கள் தெரிவித்தன.

கமல் 1959ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்றார். சமீபத்தில் திரைத்துறையில் தனது 50-வது ஆண்டை கொண்டாடிய கமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உலக நாயகன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கமல், இலங்கைத் தமிழர்களின் துயரம் காரணமாக தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு கடந்த ஆண்டு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்லா புகழும் கமல் இறைவன் ஒருவனுக்கே
கடவுளை மற கமலை நினை


இது போல போஸ்டர் சென்னை முழுவதும் ஓட்ட பட்டிருப்பது கமலுக்கு தெரியாதா? இவர் என்ன கடவுளா ? ஒரு புறம் நற்பணி மன்றம் , மற்றுமொரு மன்ற போஸ்டர் ஆயிரக்கணக்கில் அவர் பார்வைக்கே வராமல் ஒட்டப்பட்டதா ?
-நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment