இது குறித்து அமெரிக்க தொழிலார் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; வேலை வாய்ப்பு, வேலையின்மை தொடர்பாக கடந்த 70 ஆண்டுகளாக கணக்கிடப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வேலை இல்லாதவர்கள் 9 . 8 சதமாக உயர்ந்திருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்த அக்டோபரில்10. 2 சதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 6 மாதத்தில் 5 .6 மில்லியன் நபர்கள் ( 50 லட்சத்திற்கும் மேல் ) வேலை இழந்துள்ளனர். இது அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கையில் 35. 6 சதம் ஆகும். கட்டுமானம், உற்பத்தி மற்றும் வணிகம் உள்ளிட்ட துறைகளில் தான் பலர் வேலை இழந்துள்ளனர். இந்த வேலையின்மை நிலை நீடித்தால் அமெரிக்காவில் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது போன்ற வேலையின்மை காரணமாக நாட்டில் வாங்கும் சக்தி குறைந்து விடும் .
No comments:
Post a Comment