Pages

Wednesday, November 11, 2009

நடிகை சந்த்யா சிறப்பு பூஜை ?

நகரியில் பிரசித்தி பெற்ற ஷாமாலம்மன் கோவில் உள்ளது. நடிகர், நடிகைகள் பலர் இக்கோவிலில் வழிபட்டு உள்ளனர். இந்த அம்மனை கும்பிட்டால் பட வாய்ப்புகள் குவியும் என்பது திரையுலகினரின் நம்பிக்கை. ரோஜா, கீர்த்தி சாவ்லா, சுவாதி, உதய்கிரண் உள்பட பலர் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். எடிட்டர் மோகன், டைரக்டர் ராஜா குடும்பத்தினரும் இங்கு வந்துள்ளார்கள்.

இந்த அம்மன் பற்றி கேள்விப்பட்ட சந்தியா நேற்று காலை கோவிலுக்கு சென்றார். அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். சிறிது நேரம் சாமி முன் உட்கார்ந்து தியானம் செய்தார். சந்தியா வந்திருப்பதை அறிந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் கோவில் முன் கூடினார்கள். சாமி கும்பிட்டு விட்டு புறப்பட்ட சந்தியா கூறியது

"ஷாமாலம்மனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று கேள்விப்பட்டேன். அதனால் அம்மாவுடன் வந்து சாமி தரிசனம் செய்தேன். இந்த கோவிலுக்கு வந்ததன் மூலம் எனக்கு மனநிறைவு ஏற்பட்டது. தொடர்ந்து இங்கு வருவேன்.

நகரியில் உள்ள தெலுங்கு மக்கள் என்னை அடையாளம் கண்டு சூழ்ந்து கொண்டது சந்தோஷமாக இருந்தது. “காதல்” உள்பட பல படங்கள் தெலுங்கில் வந்ததால் என்னை தெரிந்து வைத்துள்ளனர்" என்றார்.

No comments:

Post a Comment