
நடிகை கோபிகாவுக்கு கடந்த வருடம் ஜூலை 17-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் கணவர் அஜிலேசுடன் ஐயர்லாந்தில் குடியேறினார். சினிமாவில் நடிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் “சுவாந்தம் லேகாகன்” என்ற மலையாள படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இதில் திலீப் மனைவியாக நடிக்கிறார். சுகுமார் டைரக்டு இயக்குகிறார். கணவர் மீண்டும் நடிக்க பச்சைக்கொடி காட்டியதால் வந்தேன் என்றார். தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன் என்றும் கூறினார்.
படப்பிடிப்பில் கோபிகாவின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் வியந்தார்கள். வயிறு பெருத்தப்படி கர்ப்பமான பெண்போல் இருந்தார். நிஜமாகவே கர்ப்பமாக இருப்பதாகவே பலரும் நம்பினார்கள்.
படக்குழுவினருக்கு மட்டுமே அவர் கர்ப்பவதி கேரக்டரில் நடிக்கிற விஷயம் தெரிந்து இருந்தது.
No comments:
Post a Comment